The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold
ஆகாயத்தாமரை நீரில் கூட்டம் கூட்டமாக காணப்படும். ஆனால் இதன் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.
ஆகாயத்தாமரையின் இலையை நன்றாக அரைத்து கரப்பான், தோல் நோய் போன்ற புண்களின் மீது வைத்துக்கட்டினால் புண்கள் விரைவில் குணமாகும்.
மூலநோய்க்கு மருந்து தேடி அலைபவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் கிடைக்க கூடியதும் கூட, மூலநோய்க்கு ஆசனவாயில் இதன் இலையின் சாறை வைத்து கட்டினால் குணமடையும்.
100 மி.லி இலைச்சாறுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து இளஞ்சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் துணியில் தொட்டு வெளிமூலம், மூல எரிச்சல், வலி போன்றவற்றுக்கு ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
பெண்களின் மார்பினுள் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தை குணப்படுத்த 25 மில்லி ஆகாயத்தாமரையின் இலை சாற்றை சிறிது தேன் கலந்து தினமும் காலை, மாலை குடித்தால் கிருமிகள் அழிந்துவிடும். மேலும் நீர் சுருக்கு, மூலம், சீதபேதி ஆகியவை குணமாகும்.
ஆகாயத்தாமரையின் இலையின் சாறு 400 மில்லி மற்றும் நல்லெண்ணெய் 800 மில்லி சேர்த்து இளஞ் சூடாக தீயிட்டு காய்ச்சி, கிச்சிலி கிழங்கு, சந்தனதூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி என ஒவ்வொன்றையும் 8 கிராம் எடுத்து காய்ச்சி, குளிர்வித்து தினமும் காலை, மாலை தலைக்கு தேய்த்து வர உட்சூடு, கண் எரிச்சல், மூலம் ஆகியவை குணமாகும்.
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
0 comment