Bhavisys

The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold

Editor Picked News

கொத்தவரங்காய் மசாலா

Published 2 months ago by

தேவையான பொருட்கள்:

நறுக்கிய கொத்தவரங்காய்-2 கப், 

பொடியாக நறுக்கிய வெங்காயம்-1, 

தேங்காய்த் துருவல்-2 டேபிள்ஸ்பூன், 

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை-2 டேபிள்ஸ்பூன், 

மிளகாய் தூள்-2 டீஸ்பூன், 

சர்க்கரை-அரை டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கேற்ப, 

கடுகு-அரை டீஸ்பூன், 

சீரகம் - அரை டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், 

எண்ணெய் -3 டீஸ்பூன்.

செய்முறை:

கொத்தவரங்காயை அளவாக தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். 

தண்ணீரை வடிகட்ட வேண்டாம். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,சீரகம், மஞ்சள்தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். 

கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் சேர்க்கவும். வேர்க்கடலை பவுடரும் தேங்காயும் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். 

கொத்தவரங்காய் வேக வைத்த தண்ணீரையும் சேர்க்கவும். மூடி வைத்து சமைக்கவும். சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.


News Audio


Source Name:

Source Link:

0 comment