The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த தக்காளி – 3-4 (பெரியது மற்றும் நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
முட்டை – 1
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை போட்டு தீயை அதிகரித்து, 3-4 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
பின் தீயை குறைத்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
கலவையானது சட்னி போன்று நன்கு வதங்கியதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு முறை கிளறி, உடனே இறக்கி விட வேண்டும்.
ஒருவேளை அப்படியே அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால், சட்னியானது முட்டைப் பொரியல் போன்று ஆகிவிடும்.
இறுதியில் அதனை தோசை, இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
0 comment