The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold
வீட்டில் தெற்கு மற்றும் கிழக்கு திசைகள் சந்திக்கும் தென்கிழக்குப் பகுதி. இது வாஸ்துப் படி அக்னி பகவான் குடிக் கொண்டிருக்கும் இடம். இந்த இடத்தில் வாஸ்துப் படி சமையல் அறை அமைக்கும் போது குடும்பத்தில் சண்டைகள் இன்றி ஒற்றுமை உண்டாகும். சுப காரியங்கள் தடையின்றி நல்லதாகவே நிகழ்ந்தோறும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இந்த அறையின் தளம் வடக்கு. கிழக்குப் பகுதி சற்று தாழ்வாகவும் மற்றும் தெற்கு மேற்கு பகுதி சற்று உயரமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், இந்த அறையின் கிழக்கு,வடகிழக்கு மற்றும் தெற்கு, தென்கிழக்குப் பகுதியில் ஜன்னல்கள் அமைப்பது சிறப்பு.
தென்கிழக்குப் பகுதி அறையை படுக்கும் அறையாகப் பயன்படுத்துவதை அறவேத் தவிர்க்க வேண்டும், இதனால் தேவையற்ற விரையச்செலவு, மருத்துவச் செலவு மற்றும் குடும்பத்தில் சண்டைச் சச்சரவு போன்றவை உண்டாகும்.
தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை:
சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்
பூஜை அறை
தென்கிழக்கு மூலையில் வரகூடாதவை - உள் மற்றும் வெளி மூலைகள்:
குடும்பத் தலைவன், தலைவி படுக்கையறை.
கழிவறை.
உள்மூலை படிக்கட்டு.
வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு.
பள்ளம்.
கிணறு.
ஆழ்துளை கிணறு.
கழிவுநீர் தொட்டி.
கார் போர்டிகோ.
குளியலறை.
மேல்நிலை தண்ணீர் தொட்டி.
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
0 comment