Bhavisys

The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold

Editor Picked News

ஒரு வீட்டின் அமைப்பில் ஆண் மனை பெண் மனை உண்டா??

Published 2 months ago by

ஒரு இடம் ஆண் மனையா அல்லது பெண் மனையா? ஒரு மனை என்பது  ஆண்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் தன்மையுள்ள மனையா, அல்லது பெண்கள் தங்கள் திக எண்ணிக்கையில் வசிக்கும் மனையா என்பதுபற்றி பார்க்க வேண்டும்.

இந்த உலகில் உள்ள அதிகபட்ச அறிவுள்ள உயிரினமாக மனித உயிரினத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் இருக்கிறது. மனிதர்கள் வீடு கட்டி வசிக்கப்போகும் மற்றும் வசித்துக்கொண்டிருக்கும் மனையிலும், ஆண் பெண் என்று இருக்கின்றதா என்றால்,வாஸ்து படி இருக்கிறது.

கிழக்கு மற்றும் மேற்கு அதிக நீளமாக உள்ள மனைகளில் வசிக்கின்ற நபர்களை பார்க்கும் போது அதிக எண்ணிக்கையில் ஆண்களாக உள்ளனர்.இதில் மாற்றம் ஏற்பட்டு அங்கு பெண்கள் அதிகமாக இருந்தாலும்,அவர்களால் வெற்றி என்பது கொஞ்சம் கடினமாகி விடுகிறது. ஆக இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது ஒரு சிறிய மாற்றம் ஏற்படுத்தி கொடுக்கும் போது,அவர்களும்,வாழ்வில் அடுத்த கட்ட பயணம் செய்ய முடியும்.

இதேபோல தெற்கு வடக்கு நீளம் அதிகமாக இருந்து,மேற்கு மற்றும் கிழக்கு குறைவாக இருக்கும் போது,அந்தமனை என்பது பெண் மனை என்கிற அமைப்பில் வந்துவிடும்.அப்படிப்பட்ட இடங்களில் அந்தவீட்டில் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் போது,அந்த வீட்டில் வாழ்வில் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழமுடியும். அதுவே முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் போது அது பெண் மனையாக இருக்கின்ற காரணத்தால் ஒரிரு பாதிப்பை கட்டாயமாக கொடுக்கும். இந்த மாதிரியான இடங்களில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து அதனை அந்த மனையில் வசிப்பவர்கள் செய்யும் போது,மிகச்சிறந்த வாழ்க்கை வாழ முடியும்.

ஆக ஆண் மனையில் பெண்களும்,பெண் மனையில் ஆண்களும் வாழமுடியும். ஆனால் அந்த வீடு மற்றும் மனை வாஸ்து விதிகளுக்கு உட்பட்டும்,மனையடி சாஸ்திர கணிதத்திற்கு பொருந்தியும் இருக்க சிறப்பான வாழ்க்கை  அமையும். 


News Audio


Source Name:

Source Link:

0 comment