The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold
ஒரு மனிதன் ,தன் ஆழ்ந்த உறக்கத்துல இருந்து கண் விழிக்கும்போது பார்க்கும் பொருட்கள் மங்களகரமான பொருளா இருந்தா, அன்னைக்கு முழுக்க அவன் சந்தோஷமா இருப்பான்னு சாஸ்திரங்கள் சொல்கிறது.
அவ்வாறு தூக்கத்திலிருந்து விழிக்கும்போது இதையெல்லாம் பார்த்தா அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருமுன்னு ஒரு பெரிய பட்டியலையே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அவை..
காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் முதன் முதலில் கண்விழித்து பார்ப்பது நம்ம வலது உள்ளங்கையா இருக்கணுமாம். அப்படி முதன் முதல்ல உங்களோட வலது உள்ளங்கையைப் பார்த்தீங்கன்னா, அன்னைக்கு முழுக்கவே மங்களகரமான காரியங்கள் நடக்கும்னு சொல்றாங்க.
தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது கண்ணாடியில், உங்கள் முகத்தையே பார்த்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படுமாம். உங்களின் பாசத்திற்குரியவர்களான அம்மா, மனைவி, குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லதாம். காலையில் எழுந்ததும் கண் விழித்து முதன் முதலில் சூரியனை தரிசிப்பது சிறந்தது. தாமரைப் பூ, சந்தனம், கடல் மற்றும் அழகான இயற்கைக் காட்சிகளை காலை கண் விழித்ததும் பார்ப்பது நல்லது. இது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தந்து அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றும்.
மேலும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றை காலையில் எழுந்ததும் கண் விழித்து பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தை தந்து அன்றைய தினத்தை இனிமையான நாளாக ஆக்குகிறது.
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
0 comment